திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி உத்தரவுப்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் மேற்பார்வையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர், டெல்டா தனிப்பிரிவு காவல் துறையினர் இணைந்து, மாவட்டம் முழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில் தண்டரை பகுதியில் 1000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
மேலும் 55 லிட்டர் கள்ளச்சாராயத்தை வைத்திருந்த அண்ணாமலை, 5 லிட்டர் கள்ளச்சாராயம் வைத்திருந்த ராணி, 40 லிட்டர் கள்ளச்சாராயம் வைத்திருந்த மாசிலாமணி, 35 லிட்டர் கள்ளச்சாராயம் வைத்திருந்த கோபி, 55 லிட்டர் கள்ளச்சாராயம் வைத்திருந்த முனியப்பன், மோகன் போன்றோரும்
தண்டரைப் பகுதியில் 180 மில்லி கொள்ளளவு கொண்ட 23 மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த ஐயப்பன், 90 லிட்டர் கள்ளச்சாராயம் விற்பனைக்காக வைத்திருந்த பிரதாப், செங்கம் தாலுகா வாய்விடாந்தாங்கல் பகுதியில் 55 லிட்டர் கள்ளச்சாராயம் விற்பனைக்காக வைத்திருந்த ஸ்ரீகாந்த், ராஜமணி உள்ளிட்ட பத்து பேரை காவல் துறையினர் கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
இதையும் படிங்க... தொடர் கள்ளச் சாராய கடத்தல்கள்; 810 லிட்டர் பிடிபட்டது!