ETV Bharat / state

மனைவியை கழுத்து அறுத்துக்கொலை செய்த கணவன் போலீஸில் சரண் - surrendered to the police

திருவண்ணாமலை மாவட்டம், கொரல்பாக்கம் கிராமத்தில் மனைவியை கழுத்தறுத்துக்கொன்ற கணவன் போலீஸில் சரணடைந்தார்.

மனைவி கழுத்து அறுத்து கொலை செய்த கணவன் போலிஸில் சரண்

author img

By

Published : Sep 16, 2022, 6:44 PM IST

திருவண்ணாமலை போளூர் அடுத்த அலங்காரமங்கலம் கிராமத்தைச்சேர்ந்தவர், சுரேஷ் (36). இவரது மனைவி பச்சையம்மன் (30). இவர்களுக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கொரால்பாக்கம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் பச்சையம்மனுக்கும் சுரேஷுக்கும் ஏற்பட்ட தகராறில், தனது மனைவி பச்சையம்மனை வீட்டில் இருந்த கத்தியை வைத்து கழுத்தறுத்துக்கொலை செய்துள்ளார், சுரேஷ்.

கழுத்தறுத்துக் கொலை செய்த பின்னர் போளூர் காவல் நிலையத்தில் கணவன் சுரேஷ் கத்தியுடன் சென்று சரணடைந்தார். மேலும் சம்பவ இடத்திற்குச்சென்ற போளூர் காவல் ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின், பச்சையம்மனின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: அதிமுக பிரமுகரின் இல்ல விழாவில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் பெண்படுகாயம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.