தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ரூ.9.5 கோடி மதிப்பீட்டில் 9 இணை ஆணையர் அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டு 19 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
அதன்படி, திருவண்ணாமலையை மையமாக கொண்டு திருவண்ணாமலையில், புதிய இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் கட்டப்பட்டது. அதனை, நேற்று (டிசம்பர் 31) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தின் கீழ் திருவண்ணாமலை இணை ஆணையர் மண்டபத்தில் 225 பட்டியலில் சேர்ந்த கோயில்களும், திருவண்ணாமலை உதவி ஆணையர் பிரிவில் 1127 பட்டியலில் சேராத திருக்கோயில்களும், கிருஷ்ணகிரி உதவி ஆணையர் பிரிவில் 1784 பட்டியலில் சேராத கோயில்களும் உள்ளன.
இந்த அலுவலகத் திறப்பு விழாவில் அதிமுக மாவட்டச் செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஆட்சியர் சந்தீப்நந்துரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பிரம்மபுரீஸ்வரர் கோவில் திருப்பணிக்கு ரூ.34,70,000 நிதி ஒதுக்கீடு!