திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாலை 4 மணி முதல் சுமார் ஒன்றரை மணி நேரம் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
சூறைக் காற்று வீசியதால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. குறிப்பாக போளூர் பகுதியில் பெய்த சூறாவளி காற்றுடன் கூடிய மழையினால் அத்திமூர் சாலையில் மரம் ஒன்றும், மின்கம்பம் ஒன்றும் கீழே சாய்ந்தது.
தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வட, உள் மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் மேலும் 96 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி!