திருவண்ணாமலையில் இன்று மாலை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென மழை கொட்டித் தீர்த்ததால், மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதேபோல் செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர், போளூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பெய்த மழை பொதுமக்களையும், விவசாயிகளையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
தொடர்ந்து மழை பெய்துவருவதால் விவசாயிகள் பயிரிட்டுள்ள மணிலா பயிர்களை நிலத்தில் இருந்து எடுப்பதற்கு முன்பாகவே முளைக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. விவசாயக் கூலி ஆட்கள் கிடைக்காத நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவது விவசாயிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொடர்ந்து கூலி வேலை செய்பவர்கள் தங்களுடைய கூலியை உயர்த்தி வருவதால் விவசாயிகள் பெரும் கவலைக்கு உள்ளாகியுள்ளனர்.