திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜன.06) அதிகாலை முதலே மாவட்டத்தின் நகர் பகுதியில் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால், நகர் பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இதையும் படிங்க: சென்னையில் புத்தாண்டின் தொடக்கத்தில் வரலாறு காணாத மழை!