திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் அனைத்து ஊராட்சிகளிலும் தூய்மைப் பணியாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர்கள் நோய்த் தொற்று பரவாத வண்ணம் கிருமி நாசினி, ப்ளீச்சிங் பவுடர் உள்ளிட்டவற்றைத் தெளித்து வருகின்றனர்.
அவர்களுக்கு கரோனா தொற்று பரவாமல் இருக்க, வேங்கிக்கால் ஊராட்சி அலுவலகம் முன்பு வட்டார மருத்துவமனையின் சார்பில் பத்து நாள்களுக்குத் தேவையான ஜிங்க் சல்பேட் மாத்திரை, மல்டி வைட்டமின் மாத்திரைகளை சுகாதாரத் துறையினர் வழங்கினர்.
அதனைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அண்ணாதுரை, அவரது பகுதிகளில் உள்ள 75க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகளை வழங்கினார்.
இதையும் படிங்க: காவலர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் வழங்கிய காவல் ஆணையர்