ETV Bharat / state

திருக்குறள் ஒப்புவித்த மாணவிக்கு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் புதிய வீடு - Pasumai Veedugal Thittam

திருவண்ணாமலை: திருக்குறள் ஒப்புவித்த சாதனை மாணவி நளாயினி குடும்பத்திற்கு முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், புதிய வீடு கட்டும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

நளாயினி
author img

By

Published : Jul 16, 2019, 12:21 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் சு.நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் நளாயினி. இவரது தாயும், தந்தையும் கூலி வேலை செய்து ஏழ்மையான சூழ்நிலையில் குடும்பம் நடத்தி வருகின்றனர்.

நளாயினி மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, தினமும் பத்து திருக்குறள் மூன்று முறை படிக்க வேண்டும், அடுத்த நாள் படித்த திருக்குறளை ஒப்பிவிக்க வேண்டும் என ஆசிரியர் பயிற்சி அளித்துள்ளார். இது நளாயினியை ஊக்கப்படுத்தியுள்ளது. மேலும், தான் அனைத்து திருக்குறளையும் படித்து பார்க்காமல் ஒப்புவிக்க பயிற்சி அளிக்குமாறு ஆசிரியரிடம், நளாயினி கேட்டுக் கொண்டார். இதன்படி, மாணவி நளாயினிக்கு 1330 குறள்களையும் படித்து ஒப்புவிக்கும் பயிற்சியை படிப்படியாக ஆசிரியர்கள் அளித்துள்ளனர்.

இதனையடுத்து நளாயினி நான்காவது படிக்கும்போது பள்ளிக்கல்வித் துறை சார்பாக நடைபெற்ற கலை திருவிழாவில் கலந்துகொண்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முதல் பரிசு பெற்றார்.

அதன்பின், மாணவி நளாயினியை சந்தித்த மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி, அவரது குடும்பத்திற்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுவதற்கு உத்தரவிட்டார். பின்னர் நல்லூர் கிராமத்திற்கு நேரில் சென்ற ஆட்சியர், நளாயினி குடும்பத்திற்கு கழிவறை உட்பட அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய வீடு கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.

திருக்குறள் ஒப்புவித்த சாதனை மாணவிக்கு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் புதிய வீடு
திருக்குறள் ஒப்புவித்த சாதனை மாணவிக்கு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் புதிய வீடு

மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி மாணவி நளாயினியின் திறமையை பாராட்டும் வகையில், அவருக்கு 8 கிராம் தங்க சங்கிலி அணிவித்து, புதிய LED TV ஒன்றையும் பரிசாக வழங்கினார்.

இதுகுறித்து மாணவி நளாயினி கூறும்போது, ’என்னுடைய குறிக்கோள் மாவட்ட ஆட்சித் தலைவராகி என் போன்ற ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்வது’ என்றார்.

Intro:திருக்குறள் ஒப்புவிக்கும் சாதனை மாணவி நளாயினி குடும்பத்திற்கு முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தொடக்கிவைத்தார்.Body:திருக்குறள் ஒப்புவிக்கும் சாதனை மாணவி நளாயினி குடும்பத்திற்கு முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தொடக்கிவைத்தார்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் சு.நல்லூர் கிராமத்தில் வசித்து வரும் மாணவி நளாயினி தற்போது சு.நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

தந்தை மற்றும் தாய் கூலி வேலை செய்து ஏழ்மையான சூழ்நிலையில் குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

நளாயினி சு.நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது அவரது ஆசிரியர் தினமும் பத்து திருக்குறள் மூன்று முறை படிக்க வேண்டும், அடுத்த நாள் படித்த திருக்குறளை ஆசிரியரிடம் விடுவிக்க வேண்டும் என பயிற்சி அளித்துள்ளார்.

இந்த பயிற்சி நளாயினியை மேலும் ஊக்கப்படுத்தி உள்ளது. நளாயினி தனது ஆசிரியரிடம் தான் அனைத்து திருக்குறளையும் படித்து பார்க்காமல் ஒப்புவிக்க பயிற்சி அளிக்க கேட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் மாணவி நளாயினிக்கு 1330 குறள்களையும் படித்து ஒப்புவிக்கும் பயிற்சியை படிப்படியாக அளித்துள்ளனர்.

நளாயினி நான்காவது படிக்கும்போது பள்ளிக்கல்வித் துறை சார்பாக நடைபெற்ற கலை திருவிழாவில் கலந்துகொண்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முதல் பரிசு பெற்றார்.

இந்த சூழ்நிலையில் மாணவி நளாயினியை சந்தித்த மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவி நளாயினி குடும்பத்திற்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுவதற்கு உத்தரவிட்டார்.

சு.நல்லூர் கிராமத்திற்கு நேரில் சென்று நளாயினி குடும்பத்திற்கு கழிவறை உட்பட அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய வீடு கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நளாயினியின் திறமையை பாராட்டும் வகையிலும் அவரை ஊக்கப்படுத்தும் வகையிலும் 8 கிராம் தங்க சங்கிலி அணிவித்து அவரிடம் புதிய led தொலைக்காட்சிப் பெட்டியிணையும் பரிசாக வழங்கினார்.

மாணவி நளாயினி தெரிவிக்கையில் என்னுடைய குறிக்கோள் லட்சியம் எல்லாம் கலெக்டர் ஆகி என் போன்ற ஏழைகளுக்கு உதவி செய்வேன் என்று தெரிவித்தார்.Conclusion:திருக்குறள் ஒப்புவிக்கும் சாதனை மாணவி நளாயினி குடும்பத்திற்கு முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தொடக்கிவைத்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.