திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சந்தகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் ஆடு மாடுகளை வாங்கி விற்கும் வியாபாரி ஆவார்.
இன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு கூட்டு ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். லாரி மோதியதால் அவரது இருசக்கர வாகனமும் தீப்பிடித்து சம்பவ இடத்திலேயே எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.