திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ராஜ வீதியில் டிப்ளமோ பார்மசி முடித்துவிட்டு நபர் ஒருவர் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவர் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட தலைமை மருத்துவர்கள் போலி மருத்துவர் பாலமுருகனை பிடித்து செங்கம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கரோனா காலத்தில் மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்துவருவது அதிகரித்துள்ளது.
இதற்கு காரணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை மருத்துவர்கள் சரிவர கவனிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நாமக்கல் அருகே போலி மருத்துவர் கைது!