திருவண்ணாமலை மாவட்டம் பிருதூர் கிராமம் அருந்ததியர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் தனது குடும்பத்துடன் வந்தவாசி அடுத்த வெள்ளிமேடு பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், இவரது குடிசை வீடானது மின் கசிவால் திடீரென தீப்பற்றி எரிந்தது. இது குறித்து தகவலறிந்த வந்தவாசி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருள்கள் முற்றிலும் எரிந்து கருகின. இது குறித்து வந்தவாசி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க பழங்கள் வழங்கிய நற்பணி மன்றங்கள்!