ETV Bharat / state

‘காபி போட்டு கொடுத்தவர்களுக்கு, பதவி கொடுத்தவர் கலைஞர்’ - எ.வ. வேலு - E.v. Velu press meet

திருவண்ணாமலை: உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் காபி போட்டு கொடுத்தவர்களுக்கு, கவுன்சிலர் பதவி கொடுத்தவர் கலைஞர் என எ.வ. வேலு பெருமிதமாகக் கூறினார்.

E.V. Velu Local Election Campaign in Thiruvannamalai
E.V. Velu Local Election Campaign in Thiruvannamalai
author img

By

Published : Dec 25, 2019, 7:33 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும், கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய குழு, மாவட்ட ஊராட்சி குழு வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரைப் பொதுக்கூட்டம் தென்மகா தேவமங்கலம் கலைஞர் திடலில் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினருமான எ.வ. வேலு கலந்துகொண்டு தேர்தலில் போட்டியிடும் 21 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்த, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பஞ்சாயத்துராஜ் என்ற சட்டத்தை இயற்றினார். இந்த சட்டத்தினால், கிராமங்களில் வசிக்கும் ஆண்கள், பெண்களை மோர், காப்பி போட்டு கொடுப்பதற்கு பயன்படுத்தி வந்த நிலையை மாற்றி, பெண்களை முதன்முதலில் பதவி நாற்காலியில் அமர வைக்க உதவியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிதான்’ என்றார்.

தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு முதல் எடப்பாடி அரசு தேர்தல் நடத்தாமல், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஐந்து ஆண்டு காலம் இதற்கு முன் ஒரு முறை தேர்தல் நடத்தாமல் இருந்தது போல், நடந்து கொண்டிருக்கிறது.

மேடையில் பரப்புரை செய்யும் எ.வ. வேலு

ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதி இந்த அரசிடம், தேர்தல் நடத்தவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று கூறியதன் விளைவாக இப்போது உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது’ என்று கூறினார். இந்தக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ’உள்ளாட்சித் தேர்தலை நடைபிணமாக்கியவர் இந்த அமைச்சர்தான்’ - சண்முகசுந்தரம் எம்பி காட்டம்

Intro:காபி போட்டு கொடுத்தவர்களுக்கு, கவுன்சிலர் பதவி கொடுத்தவர் கலைஞர்,எ.வ. வேலு.

Body:காபி போட்டு கொடுத்தவர்களுக்கு, கவுன்சிலர் பதவி கொடுத்தவர் கலைஞர்,எ.வ. வேலு.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய குழு வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டம் தென் மகா தேவமங்கலம் கலைஞர் திடலில் நடைபெற்றது.

இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினருமான எ.வ. வேலு கலந்துகொண்டு தேர்தலில் போட்டியிடும் 21 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது,
இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இருக்கிற, புகழ்பெற்ற தலைவர், நம்முடைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் புதியதாக ஒரு சட்டத்தை இயற்றினார். அந்த சட்டத்திற்கு பெயர் பஞ்சாயத்துராஜ் சட்டம் என்று பெயர்.

கிராமங்களில் மோர் கொண்டு வந்து கொடுப்பதற்கும், காப்பி போட்டு கொடுப்பதற்கும் பெண்களை ஆண்கள் பயன்படுத்தினர். அப்படிப்பட்ட பெண்களை முதன்முதலில் பதவி நாற்காலியில் அமர வைத்து அழகு பார்த்தவர் தலைவர் கலைஞர்.

2016 ஆம் ஆண்டு முதல் எடப்பாடி அரசு தேர்தல் நடத்தாமல், அம்மா அவர்கள் ஐந்து ஆண்டு காலம் இதற்கு முன் ஒரு முறை தேர்தல் நடத்தாமல் இருந்ததுபோல், நடந்துகொண்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட் நீதிபதி இந்த அரசாங்கத்திடம், தேர்தல் நடத்தவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னதன் விளைவாக இப்போது உள்ளாட்சி மன்றத் தேர்தல் வந்திருக்கிறது. அதை வடிவேலு காமெடி மாதிரி, வரும் ஆனா வராது. இப்போ வராது ஆனா வந்துடுச்சு, என்று நகைச்சுவை பொங்க தெரிவித்தார்.

இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட திமுக, காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Conclusion:காபி போட்டு கொடுத்தவர்களுக்கு, கவுன்சிலர் பதவி கொடுத்தவர் கலைஞர்,எ.வ. வேலு.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.