சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு ஆன்மிகத்தில் அதிக நாட்டம் உண்டு. இவர், தமிழ்நாடு மட்டுமல்லாத பிற மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவருகிறார்.
கடந்த மாதம் திருப்பதியில் அவர், சாமி தரிசனம் செய்த நிலையில், அமாவாசையான இன்று தனது மகள் செந்தாமரையுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
![Durga Stalin swamy darshan at thiruvannamalai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvm-tvmalai-temple-cm-wife-darsan-pho-scr-tn10048_23082021210319_2308f_1629732799_125.jpg)
மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவேண்டும் என பல்வேறு கோயில்களில் துர்கா ஸ்டாலின் வேண்டுதல் வைத்ததாக கூறப்படுகிறது. ஊரடங்கில், கோயில்கள் மூடப்பட்டிருந்ததால், கோயில்களுக்கு செல்லமுடியாததால், தற்போது ஊரடங்கு தளர்வுகளின் போது கோயில்களுக்கு சென்றுவருகிறார் துர்கா ஸ்டாலின்.
இதையும் படிங்க: 'ஸ்டாலினுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு' - துர்கா ஸ்டாலின்