திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பயிற்சி பாசறை கூட்டம் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (அக்.22) மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திமுக பயிற்சி பாசறை கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மு.க.ஸ்டாலின், '2024 நாடாளுமன்ற தேர்தல் நமக்காகவே காத்துக்கொண்டிருக்கிறது. இத்தேர்தலில் வெற்றிக்கனியை நாம் சுவைக்க வேண்டும். 2021-ல் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு ஒரு அடித்தளமாக அமைந்தது, திருவண்ணாமலை தான். திமுகவின் கோட்டையாக இருப்பதும் இந்த திருவண்ணாமலைதான்.
-
தரையில் ஊர்ந்தவர்கள் தலை நிமிர்ந்து பார்த்தால் தமிழ்நாட்டின் முன்னேற்றம் தெரியும்!
— M.K.Stalin (@mkstalin) October 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள விடியல் #INDIA எங்கும் வரும் காலம் கனிந்துவிட்டதை, திருவண்ணாமலையில் கூடியிருந்த பாக முகவர்களின் எழுச்சி காட்டுகிறது!
தீபம் தெரிவது போல் ஒளி தெரிகிறது! நிச்சயம் #INDIA… pic.twitter.com/6tbBfx90wT
">தரையில் ஊர்ந்தவர்கள் தலை நிமிர்ந்து பார்த்தால் தமிழ்நாட்டின் முன்னேற்றம் தெரியும்!
— M.K.Stalin (@mkstalin) October 22, 2023
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள விடியல் #INDIA எங்கும் வரும் காலம் கனிந்துவிட்டதை, திருவண்ணாமலையில் கூடியிருந்த பாக முகவர்களின் எழுச்சி காட்டுகிறது!
தீபம் தெரிவது போல் ஒளி தெரிகிறது! நிச்சயம் #INDIA… pic.twitter.com/6tbBfx90wTதரையில் ஊர்ந்தவர்கள் தலை நிமிர்ந்து பார்த்தால் தமிழ்நாட்டின் முன்னேற்றம் தெரியும்!
— M.K.Stalin (@mkstalin) October 22, 2023
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள விடியல் #INDIA எங்கும் வரும் காலம் கனிந்துவிட்டதை, திருவண்ணாமலையில் கூடியிருந்த பாக முகவர்களின் எழுச்சி காட்டுகிறது!
தீபம் தெரிவது போல் ஒளி தெரிகிறது! நிச்சயம் #INDIA… pic.twitter.com/6tbBfx90wT
தினமும் ஓடி ஓடி எவ்வளவு தான் உழைத்து களைத்தாலும், உங்களைப் பார்த்ததும் எனக்கு ஒரு Energy வந்துவிடுகிறது. ஏனெனில், நீங்கள் தான் எனக்கு Secrect of My Energy. திருவண்ணாமலையும் தீபமும் போலதான், திருவண்ணாமலையும் திமுகவும். இதை யாராலும் பிரிக்க முடியாது.
முதல்முறையாக 1957 தேர்தலில் போட்டியிட்டு 15 வெற்றி பெற்றனர். அதில் மூன்று பேர் இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள். முதல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது 2 பேர் வெற்றி பெற்றனர். அதில் ஒரு தொகுதி இந்த தொகுதி. இதில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரா.தர்மலிங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இதன் பின்னர், திருவண்ணாமலை இடைத்தேர்தல் வெற்றியே1967-ல் திமுக ஆட்சி அமைக்க அடித்தளமாக அமைந்தது.
திருவண்ணாமலையில் வாக்காளர் பட்டியலை ஒவ்வொரு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களும் கவனமாக சரி பார்க்க வேண்டும். எனக்கான உற்சாகத்தைத் தரும் திமுக தொண்டர்கள் அனைவரும் அரசின் அனைத்து திட்டங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வெற்றி ஒன்றே தான் நமக்கான இலக்காக இருக்க வேண்டும்.
வெற்றியை இலக்காகக் கொண்ட நமது ஆட்சி அனைவருக்கும் பொதுவான மக்களாட்சியாக உள்ளது. கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மக்களின் தேவைகளை கண்டறிந்து நிறைவேற்றி தர வேண்டும். அதோடு, திமுக அரசின் திட்டங்களை எடுத்துக்கூற நேரம் நமக்கு போதாது.
பொய்யான தகவல்களைப் பரப்பி வரும் எடப்பாடி பழனிசாமி, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், காலை சிற்றுண்டி திட்டம் எல்லாம் உங்கள் திட்டமா? என கேட்கிறார். அவரிடம், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை யார் ஆட்சியில் நடந்தது? இங்கு பலரும் திமுக ஒரு குடும்பக் கட்சி என்று கூறுகின்றனர். ஆமாம். திமுக குடும்ப கட்சி தான், தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான குடும்பங்களை வாழ வைத்துவரும் கட்சி' என்று தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாநில மருத்துவ அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.தரணிவந்தன், செயற்குழு உறுப்பினர் ரா.ஸ்ரீதரன் உள்பட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர். அதோடு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 15,000 திமுக பொறுப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிலை இருந்ததே இல்லை: அன்புமணி ராமதாஸ் வேதனை