ETV Bharat / state

திருவண்ணாமலை தீபத்திருவிழா: 'பாஸ் இல்லை என்றால் அனுமதி இல்லை’ டிஜிபி சைலேந்திரபாபு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில், பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை தீபத்திருவிழா
திருவண்ணாமலை தீபத்திருவிழா
author img

By

Published : Dec 1, 2022, 10:33 PM IST

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், ஆன்மீக பக்தர்களின் பாதுகாப்பு குறித்து டிஜிபி சைலேந்திரபாபு பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக கோயிலுக்குள் வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்தும், பக்தர்கள் சிரமமின்றி நிறைவாக சாமி தரிசனம் செய்ய உள்ள வரிசை, பக்தர்கள் அமரும் இடம், வி.ஐ.பிக்கள் அமருமிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கோயில் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயில் பெருந்தொற்றால் வழக்கமான திருவிழாக்கள் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலை நகரத்திற்குள் உள்ளே வரும் 4 முக்கிய சாலைகளில் காவல்துறையினர் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 52 இடங்களில் வாகன நிறுத்தம் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐஜி கண்ணன் தலைமையில் 4 டி.ஐ.ஜி, 27 எஸ்.பிக்கள் உள்பட 12 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பரணி தீபத்தையும், மகா தீபத்தையும் கோயிலுக்குள் காண வரும் பக்தர்களுக்கு இந்த ஆண்டு பார்கோடு வசதியுடன் கூடிய பாஸ் வழங்கப்படவுள்ளது, அதனை ஸ்கேன் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவர்.

போலியான பாஸை வைத்துக் கொண்டு உள்ளே நுழைய முடியாது, அவ்வாறு நுழைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்கள் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் சாமி தரிசனம் செய்ய பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, கோயிலை சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ளவர்களின் விவரங்கள் மற்றும் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து திருவண்ணாமலையில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி உள்ளவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

டிஜிபி சைலேந்திரபாபு அளித்த பேட்டி

நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளின் முகத்தை அடையாளம் காணக்கூடிய வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் அடங்கிய கண்காணிப்பு கேமராகளும் பொருத்தப்பட்டுள்ளது. கோயிலுக்கும், கிரிவலப் பாதைகளுக்கும் கூட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கீகாரம் இன்றி கோயிலுக்குள் எந்த நபர்களும் அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: Karthigai Deepam 2022: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.