திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயில் பெரிய நந்தி பகவானுக்கு, ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாள்களில், மாதம் இரண்டு முறை பிரதோஷ வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நாளை மறுநாள் (ஜூலை 23) பௌர்ணமியையொட்டி, இன்று (ஜூலை 21) அண்ணாமலையார் கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு பிரதோஷ சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது.
நந்தி பகவானுக்கு அரிசி மாவு, மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், தயிர், விபூதி, இளநீர், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான், பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர்.
இதையும் படிங்க: கண்கவரும் கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கு - அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை