ETV Bharat / state

அந்தி மாலையில் வானத்தில் வெளிப்பட்ட ரம்மியமான காட்சி!

author img

By

Published : Jun 27, 2020, 4:36 PM IST

திருவண்ணாமலை: சூரியன் மறையும் நேரத்தில் அடிவானத்திலிருந்து நடுவானத்திற்கு வெளிப்பட்ட ரம்மியமான காட்சி சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை சூரியன்  வானத்தில் தோன்றிய ரம்மியமான காட்சி  thiruvannamalai  crepescular ray  வானத்தில் வெளிப்பட்ட ரம்மியமான காட்சி  twilight sun video
அந்தி மாலையில் வானத்தில் வெளிப்பட்ட ரம்மியமான காட்சி!

திருவண்ணாமலையில் கடந்த 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை சூரியன் மறையும் நேரத்தில் பி.ஆர்.கே. சுவாமி என்பவர், வானில் சூரியன் மறையும் நேரத்தில் கீழ்வானத்திலிருந்து நடுவானம் வரை தீ போன்று ஒளி பரவியிருந்ததை போன்ற ஒரு ரம்மியமான காட்சியைக் கண்டுள்ளார். உடனே, அக்காட்சியை புகைப்படமாகவும், வீடியோவாகவும் அவர் பதிவுசெய்து தனது நண்பருக்கு அனுப்பியுள்ளார்.

இதனை பார்த்த அவருடைய நண்பர் முருகானந்தம், அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்தக்காட்சியை விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த மக்களாலும், சென்னையிலிருந்த மக்களாலும் பார்க்க முடிந்துள்ளது. இந்த ரம்மியமான காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது.

வானத்தில் வெளிப்பட்ட ரம்மியமான காட்சி

வானில் இதுபோன்ற காட்சி தோன்ற காரணம் சூரியன் மறையும் நேரத்திற்கு சற்று முன்னதாக, அல்லது மறைந்த சற்று நேரத்திற்கு பின்னதாக வெளிப்படும் க்ரெபஸ்குலர் (crepescular) என்னும் கதிராகும். இந்தக் கதிரானது அடிவானத்திலிருந்து நடுவானத்தை நோக்கி பிரகாசிக்கும்போது வளிமண்டல மூட்டம், தூசுத் துகள்களை ஒளிரச்செய்கிறது. இதுவே, நம் கண்களுக்கு தீ பிம்பம் போல தெரிய காரணமாகும்.

இதையும் படிங்க: சூடாமணி சூரிய கிரகணம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.