ETV Bharat / state

திருவண்ணாமலையில் புதிதாக 36 பேருக்கு கரோனா தொற்று

திருவண்ணாமலை: மாவட்டத்தில் இன்று (ஜூன் 19) ஒரே நாளில் 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை
author img

By

Published : Jun 19, 2020, 4:19 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜூன் 18) வரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 843 ஆக இருந்தது. இன்று (ஜூன் 19) புதிதாக 36 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானது. இதனால் மாவட்டம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 879 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று (ஜூன் 18) வரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 465ஆக உள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

சென்னையிலிருந்து வந்த ஏழு பேர், மதுரை, ஊட்டி, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தலா ஒருவர், கேரளாவில் இருந்து வந்த இரண்டு பேர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 13 பேர், புறநோயாளிகள் பிரிவில் இருந்து ஆறு பேர் உள்ளிட்ட 36 பேருக்கு இன்று மட்டும் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.