திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜூன் 16) வரை கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 768ஆக இருந்தது. இன்று (ஜூன் 17) புதிதாக 49 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது. இதனால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 817ஆக உயர்ந்துள்ளது. நேற்றுவரை கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 459, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
சென்னையிலிருந்து வந்த 11 பேர், காஞ்சிபுரத்திலிருந்து வந்த இரண்டு பேர், சேலம், வேலூரிலிருந்து தலா ஒருவர், பெங்களூரிலிருந்து வந்த இரண்டு பேர், சுகாதாரத் துறை பணியாளர் ஒருவர் உள்ளிட்ட 49 பேருக்கு இன்று ஒரேநாளில் கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நாகை மருத்துவமனையில் கரோனா பரவும் இடர்!