ETV Bharat / state

போலி சான்றிதழ் வழங்கி சுகாதாரப் பணியில் சேர்ந்தவர்கள் மீது புகார் - திருவண்ணாமலை செய்திகள்

திருவண்ணாமலையில் போலி சான்றிதழ் கொடுத்து சுகாதாரப் பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சுகாதாரத் துணை இயக்குநர் புகார் அளித்துள்ளார்.

health inspector  fake health inspector  complaint against fake health inspector  thiruvannamalai Deputy Director of Health department complaint against fake health inspector  Deputy Director of Health department  thiruvannamalai Deputy Director of Health department  போலி சான்றிதழ் வழங்கி சுகாதாரப் பணியில் சேர்ந்தவர்கள் மீது புகார்  போலி சான்றிதழ் வழங்கி சுகாதாரப் பணி  திருவண்ணாமலையில் போலி சான்றிதழ் வழங்கி சுகாதாரப் பணி  திருவண்ணாமலை செய்திகள்  போலி சான்றிதழ்
சுகாதாரப் பணி
author img

By

Published : Aug 25, 2021, 6:44 AM IST

திருவண்ணாமலை: கரோனா தொற்றுப் பரவலின் முதல், இரண்டாம் அலையில் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பின. அப்போது இடப்பற்றாக்குறையால் கல்லூரி வளாகங்கள், பள்ளிகள் கரோனா சிறப்புச் சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டன.

அந்நேரம் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுவதற்காக அவுட் சோர்சிங் முறையில், இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர்கள் தேர்வுசெய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர். செய்யாறு சுகாதார பகுதிகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 54 சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டது. இதில் நியமிக்கப்பட்டவர்கள் நேரடி நேர்காணல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

போலி சான்றிதழ்

இந்நிலையில் பணிக்குச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர்கள் பலருக்கு மருத்துவப்பணி தொடர்பான எந்த அடிப்படைச் செயல்பாடுகளும் தெரியாமல் இருந்துள்ளனர். மருத்துவர்களுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மருத்துவர்கள் உயர் அலுவலர்களுக்குப் புகார் அளித்தனர். இது குறித்து அவர்களிடம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். மேலும் பணி நியமனத்தில் அசல் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த நபர்கள் உரிய ஆதாரங்களுடன் சென்னையில் உள்ள சுகாதாரத் துறை இயக்குநருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.

அந்தப் புகாரின் அடிப்படையில், விசாரணை அலுவலர்கள் விசாரணை நடத்தியதில், துணை மருத்துவப் படிப்புகளை முடித்ததாக போலியான சான்று கொடுத்து 25-க்கும் மேற்பட்டோர் பணியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணை

எனவே, போலி சான்றிதழ்களைத் தயாரித்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சங்கீதா திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டியிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இதனைத் தொடர்ந்து போலி துணை மருத்துவப் படிப்புச் சான்றிதழ்களைக் கைப்பற்றியுள்ளனர். மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: சிவசங்கர் பாபா சொத்துக்களை கைப்பற்ற முயற்சிக்கும் கே.டி.ராகவன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.