திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஆகஸ்ட் 10) திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் வருகைக்காக பொதுமக்கள் தங்களுடைய மனுக்களை கைகளில் வைத்துக்கொண்டு, அலுவலக நுழைவுவாயிலில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி தனது காரை நுழைவு வாயிலிலேயே அனுப்பிவிட்டு, அங்கிருந்து பொதுமக்களிடம் நடந்தபடியே சென்று மனுக்களை வாங்கிச் சென்றார். வழிநெடுக நின்று கொண்டிருந்த மக்களிடம், மனுக்களை வாங்கிய பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கார் நிறுத்துமிடத்தில் படிக்கட்டில் அமர்ந்தபடி பொதுமக்களிடமிருந்து மற்ற மனுக்களைப் பெற்றார்.
இதையும் படிங்க: இறுதியாண்டு தேர்வுகள் நிச்சயம் நடத்த வேண்டும் - யுஜிசி