ETV Bharat / state

திருவண்ணாமலை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள்! - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

திருவண்ணாமலை: முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் செய்யார், வெம்பாக்கம், போளூர் ஆகிய வட்டங்களில் மனு அளித்ததில், 10,600 பயனாளிகளுக்கு ரூ24.87கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

chief minister welfare assistance function in thiruvannamalai
author img

By

Published : Nov 23, 2019, 10:10 AM IST

முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் செய்யார், வெம்பாக்கம், போளூர் ஆகிய வட்டங்களில் மனு அளித்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் 10,600 பயனாளிகளுக்கு ரூ24.87கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் குறிப்பாக, வருவாய்த்துறை, ஊரகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூகநலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை, கூட்டுறவுத்துறை, பழங்குடியினர் நலத்துறை ஆகியவற்றின் மூலமாக இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாற்றம், மாதாந்திர உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை, பசுமை வீடுகள் திட்டம், வேளாண் உபகரணங்கள் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

chief minister welfare assistance function in thiruvannamalai  thiruvannamalai district news  திருவண்ணாமலை மாவட்டச் செய்திகள்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்  minister sevur ramachandran
நலத்திட்ட உதவிகளை வழங்கிய சேவூர் நாராயணன்

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று பல்வேறு துறைகளின் மூலமாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசு பெண்களின் வளர்ச்சி முன்னேற்றம் பாதுகாப்பிற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது" என்றார்.

இதையும் படிங்க:ராமதாஸூக்கு கெடு விதித்த திமுக... மீறினால் 1 கோடி ரூபாய் இழப்பீடு!

Intro:முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் செய்யார், வெம்பாக்கம், வந்தவாசி, சேத்பட், போளூர் வட்டங்களில் 10600 பயனாளிகளுக்கு ரூ.24.87 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வழங்கினார்.Body:முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் செய்யார், வெம்பாக்கம், வந்தவாசி, சேத்பட், போளூர் வட்டங்களில் 10600 பயனாளிகளுக்கு ரூ.24.87 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார், வெம்பாக்கம், வந்தவாசி, சேத்பட், போளூர் ஆகிய வட்டங்களில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூகநலத் துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, கூட்டுறவுத்துறை, பழங்குடியினர் நலத்துறையின் மூலமாக 10600 பயனாளிகளுக்கு ரூ.24.87 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், மாதாந்திர உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை, பசுமை வீடுகள் திட்டம், பிரதம மந்திரி வீடு திட்டம், வேளாண் உபகரணங்கள் ஆகிய அரசு நலத்திட்ட உதவிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் மைதிலி, பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பேசும்போது கூறியதாவது, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் கடந்த 27 8 2019 முதல் 31 8 2019 வரை நேரடியாக பெறப்பட்டு, மனுதாரர்களின் தகுதியானவர்களுக்கு நிவர்த்தி காணப்பட்டு, பல்வேறு துறைகளின் மூலமாக வட்ட அளவிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு பெண்களின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பிற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதோடு மட்டுமல்லாது தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக பட்டியலிட்டு பேசினார். பின்னர் செய்யார், வெம்பாக்கம், வந்தவாசி, சேத்பட், போளூர் வட்டத்திற்கு உட்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Conclusion:முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் செய்யார், வெம்பாக்கம், வந்தவாசி, சேத்பட், போளூர் வட்டங்களில் 10600 பயனாளிகளுக்கு ரூ.24.87 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வழங்கினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.