ETV Bharat / state

உத்தரவை மதிக்காத வங்கி... ஊரடங்கை மீறிய வாடிக்கையாளர்கள்

திருவண்ணாமலை: ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலையும் மீறி சுயஉதவிக் குழு பெண்களிடம் மாதத் தவணையை கட்டாயம் கட்ட வேண்டும் என வங்கி கிளை மேலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

உத்தரவை மீறிய வங்கி
உத்தரவை மீறிய வங்கி
author img

By

Published : Apr 17, 2020, 11:21 AM IST

திருவண்ணாமலை நகரில் உள்ள இந்தியன் வங்கி சுயஉதவிக் குழு கடன் சிறப்பு கிளையில் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த ஏராளமான பெண்களும், முதியோர் உதவித் தொகை பெறுவதற்கு முதியோர்களும் கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து பணப்பரிவர்த்தனை செய்தனர்.

ஊரடங்கை மீறிய வாடிக்கையாளர்கள்

இந்தத் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் எவ்வளவு அறிவுரைகள் பெண்களிடம் கூறினாலும் சிறிதும் பொருட்படுத்தாமல் சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்காமல் வங்கி உள்ளே முன்னேறிச் செல்வதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பணம் செலுத்த வந்தவர்களை வங்கி ஊழியர் தகாத வார்த்தைகளை உபயோகப்படுத்தி திட்டியும், வசைபாடியும் வங்கி கேட்டை இழுத்து மூடி கேட்டை உலுக்கிய சம்பவம் அங்கு இருப்பவர்கள் மத்தியில் முகம் சுழிக்க வைத்தது.144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் வங்கியில் மூன்று மாதங்களுக்கு எந்தவித கடனையும் திருப்பி செலுத்த தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும் அதனை மீறி வங்கி மேலாளர் மகளிர் சுயஉதவிக் குழு பெண்களை மாத தவணையை கட்டாயம் செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தியதன் காரணமாகவே பெண்கள் முண்டியடித்துக்கொண்டு பணத்தை செலுத்துவதற்கு பெரும் திரளாகக் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இவ்வாறு ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலையும் மீறி பெண்களிடம் மாதத் தவணையை கட்டாயம் கட்ட வேண்டும் என்று அறிவுறுத்தும் கிளை மேலாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: ஊரடங்கால் தர்பூசணி வியாபாரம் தொய்வு: விவசாயிகள் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.