திருவண்ணாமலை மாவட்டம், தியாகி அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஆனந்தன். இவர் தன் சக ஆட்டோ ஓட்டுநரான பாஸ்கர் என்பவரை, தொழில் போட்டி காரணமாக அடியாட்களை வைத்து தாக்கியுள்ளார்.
தொடர்ந்து இருவரும் விரோதப் போக்கை கடைபிடித்து வந்த நிலையில், திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே நள்ளிரவு நேரத்தில் ஆனந்தனை வெட்டிக் கொலை செய்துவிட்டு, திவண்ணாமலை கிழக்குக் காவல்நிலையத்தில் பாஸ்கர் சரணடைந்தார்.
இதனையடுத்து பாஸ்கர்மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அணுப்பி வைத்தனர். மேலும் சரணடைந்த பாஸ்கரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, நள்ளிரவில் நிகழ்த்தப்பட்ட இந்தக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : கணவனின் சகோதரரை வெட்டிப்படுகொலை செய்த பெண் கைது