ETV Bharat / state

ராணுவ வீரரின் வீடியோ விவகாரம்: திருவண்ணாமலையில் இருவர் கைது! - Army Jawan Alleges wife stripped half naked

இந்திய ராணுவ வீரரான பிரபாகரனின் மனைவி மானபங்கம் படுத்தப்பட்டு, அவரது கடை அடித்து உடைக்கப்பட்டதாக வீடியோ வெளியான விவகாரத்தில், அவை தவறான தகவல் என காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் விளக்கமளித்தார். இந்த நிலையில், அவரை தாக்கிய இருவரை சந்தவாசல் போலீசார் கைது செய்தனர்.

ராணுவ வீரர் மனைவி குறித்த வீடியோ பொய்யானது -  காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் விளக்கம்!

author img

By

Published : Jun 11, 2023, 1:56 PM IST

Updated : Jun 12, 2023, 4:24 PM IST

ராணுவ வீரர் மனைவி குறித்த வீடியோ பொய்யானது - காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் விளக்கம்!

திருவண்ணாமலை: காஷ்மீரில் அவில்தார் பதவியில் பணிபுரிந்து வரும் இந்திய ராணுவ வீரரான பிரபாகரனின் மனைவி கீர்த்தி என்பவர் படவேடு ரேணுகாம்பாள் கோயில் அருகில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் மளிகை கடை நடத்தி வருவதாகவும், அந்த கடையை 120க்கும் மேற்பட்டொர் அடித்து உடைத்ததுடன், அவர் மனைவியை மானபங்க படுத்தியதாகவும் சமூக வலைதள பக்கத்தில் நேற்று (ஜூன் 10) பிரபாகரன் பதிவிட்டிருந்தார்.

மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளுமாறும் அவர் காவல் துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதனை தொடர்ந்து திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் முதல் கட்ட விசாரணையில்,"படவேடு கிராமம் ரேணுகாம்பாள் கோயில் அருகே ரேணுகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குன்னத்துர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் கட்டிடம் கட்டியுள்ளார்.

அதை படவேடு கிராமத்தைச் சார்ந்த செல்வமூர்த்தி (கீர்த்தி தந்தை) என்பவருக்கு சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.9.50 லட்சம் பெற்றுக்கொண்டு மாத வாடகையாக ரூ.3000-க்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு மேற்கண்ட குமார் இறந்துவிடவே அவரது மகனான ராமு என்பவர் கடையை தங்களிடம் திரும்ப ஒப்படைக்கக்கோரி, செல்வமூர்த்தியிடம் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அந்த பேச்சு வார்த்தையில், செல்வமூர்த்திக்கு ரூ.9.50 லட்சம் ராமு கொடுத்து விடுவது என்றும், அதைப் பெற்றுக்கொண்டு 10.02.2023 ஆம் தேதியன்று செல்வமூர்த்தி கடையை காலி செய்வதென்றும், இருவருக்கும் எழுத்து மூலமாக உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது. அதன்பின்னர், செல்வமூர்த்தி ஒப்பந்தப்படி பணத்தையும் பெற்றுக் கொள்ளாமல், கடையையும் காலி செய்யாமல் இருந்து வந்துள்ளார்.

அதனை தொடர்ந்து, ராமு பலமுறை முயற்சித்தும் செல்வமூர்த்தி உடன்படாமல் போகவே, நேற்று (10.06.2023) காலை சுமார் 10 மணிக்கு ராமு மீண்டும் கடை முன் சென்று காலி செய்யக் கூறியபோது, செல்வமூர்த்தியின் மகள் ஜீவா என்பவர் ராமுவின் தலையில் கத்தியால் தாக்கியுள்ளார். அப்போது ராணுவ வீரரின் மனைவியும், செல்வமூர்த்தியின் மகளுமான கீர்த்தி மற்றும் அவரது தாயாரும் உடன் இருந்துள்ளனர்.

கைதான இருவரின் புகைப்படம்
கைதான இருவரின் புகைப்படம்

ராமுவிற்கு ஏற்பட்ட இந்த காயத்தை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ராமுவிற்கு ஆதரவாக ஓடிவந்து, ஒப்பந்தப்படி கடையையும் காலி செய்ய மறுத்துள்ளீர்கள், கடையின் உரிமையாளரையும் தாக்குகிறீர்கள் என்று ஆவேசப்பட்டு கடையிலிருந்த பொருட்களை எடுத்து வெளியே போட்டுள்ளார்கள். மேலும், பொதுமக்கள் ஆவேசப்பட்டு பொருட்களை எடுத்து வீசியுள்ளார்களே தவிர கீர்த்தியையோ அவரது தாயாரையோ யாரும் தாக்கி மானபங்கம் செய்யவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இந்த விஷயம் முற்றிலும் மிகைப்படுத்தி கூறியுள்ள தகவல் எனவும், யாரோ ராணுவ வீரருக்கு தவறான தகவலை அளித்துள்ளனர் என்றும் காவல் இருதரப்பிலும் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் சந்தவாசல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இதன் உண்மை தன்மையின் அடிப்படையில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

இதனிடையே, ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி கீர்த்தி தாக்கப்பட்டதாக வீடியோ வெளியான விவகாரத்தில், அவரது மனைவி சந்தவாசல் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட ஹரிஹரன் (எ) ஹரிதாஸ் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க: ஆளுநரால் பட்டம் பெற முடியாமல் தவிக்கும் 9 லட்சம் மாணவர்கள்: அமைச்சர் பொன்முடி கூறிய பகீர் தகவல்!

Last Updated : Jun 12, 2023, 4:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.