திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ரமேஷ். இவர் 2014ஆம் ஆண்டு கற்பழிப்பு வழக்கில் 12 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் இருந்து தினந்தோறும் காலையில் சிறைக்கு அருகே உள்ள தோட்டத்திற்கு பணிக்காக கைதிகளை அழைத்துச் செல்வது வழக்கம். இன்றும் வழக்கம்போல் கைதிகளை வேலைக்காக காவலர்கள் அழைத்து சென்றனர்.
இந்நிலையில், வேலை முடிந்து மதிய உணவிற்காக மீண்டும் சிறைக்கு அழைத்து வரும்போது ரமேஷ் திடீரென தப்பியோடியுள்ளார். காவலர்கள் அவரை துரத்தி பிடிக்க முயன்றனர் இருப்பினும் அவர் தப்பிவிட்டார். இதுகுறித்து, சிறைத்துறை அலுவலர்கள் தனிப்படை அமைத்து தப்பியோடிய கைதி ரமேஷை பிடிப்பதற்காக பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.