ETV Bharat / state

சிவில் நீதிமன்ற இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் - 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

திருவண்ணாமலை: தமிழ்நாடு சிவில் நீதிமன்ற இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் சங்க மாநில செயற்குழு - பொதுக்குழுக் கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

author img

By

Published : May 12, 2019, 7:50 AM IST

7 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தமிழ்நாடு சிவில் நீதிமன்ற இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் சங்க மாநில செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், தமிழ்நாடு அரசு இடைநிலை கட்டளை நிறைவேற்றுனர்களை தமிழ்நாடு அமைச்சக பணியாளர்களாக சேர்த்துக்கொள்ள எவ்வித உத்தரவும் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இது சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்தல், டி கிரேடில் இருந்து சி கிரேட் ஆக பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டும் - டி கிரேட் கடை நிலை ஊழியர்கள் பார்க்கும் பணியிலேயே தங்களை அமர்த்துவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் செயற்குழு பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

7 தீர்மானங்கள் நிறைவேற்றம்

இச்செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதிலுமிருந்து அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 500-க்கும் மேற்பட்ட சிவில் நீதிமன்ற இளநிலை கட்டளை நிறைவேற்றுனர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட துணைத் தலைவர், துணைச் செயலாளர்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Intro:தமிழ்நாடு சிவில் நீதிமன்ற இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் சங்க மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.

Body:தமிழ்நாடு சிவில் நீதிமன்ற இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் சங்க மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் தமிழக அரசு இடைநிலை கட்டளை நிறைவேற்றுனர்களை தமிழ்நாடு அமைச்சக பணியாளர்களாக சேர்த்துக்கொள்ள எவ்வித உத்தரவும் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால் இது சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்வது என்றும், டி கிரேடில் இருந்து சி கிரேட்ஆக பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டும் டி கிரேட் கடை நிலை ஊழியர்கள் பார்க்கும் பணியிலேயே எங்களை அமர்த்துவதை தவிர்க்க வேண்டுமெனவும், தர ஊதியம் ரூபாய் 2400 வழங்க கோரி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்ட இரண்டரை ஆண்டு காலம் ஆகியும் தமிழக அரசு எவ்வித உத்தரவும் வழங்கப்படாமல் இருப்பதால் மேற்படி அரசாணையை ரத்து செய்து தர ஊதியத்தை உடனடியாக வழங்க கோரியும், மாண்பமை உயர் நீதிமன்றம் பரிந்துரைப்படி பயணப்படி ரூபாய் ஆயிரம் வழங்க கோரியும், தமிழகத்தில் உள்ள அனைத்து சிவில் நீதிமன்றங்களில் பல வருடங்களாக காலியாக உள்ள இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் பதவியை உடனடியாக நிரப்பிட கோரியும், பொது அறிவிப்பு செய்வதற்கு தண்டோரா கோடி ரூபாய் 250 வழங்க ஆணை பிறப்பிக்குமாறும் செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இப்பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 500க்கும் மேற்பட்ட சிவில் நீதிமன்ற இளநிலை கட்டளை நிறைவேற்றுனர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட துணைத்தலைவர், துணைச் செயலாளர்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Conclusion:தமிழ்நாடு சிவில் நீதிமன்ற இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் சங்க மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.