ETV Bharat / state

திருவண்ணாமலை தீபத் திருவிழா: 63 நாயன்மார்களை தோளில் சுமந்து பள்ளி மாணவர்கள் ஊர்வலம்..! - tiruvannamalai

Annamalaiyar Temple Deepam Festival: அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் 6ஆம் நாளில் பள்ளி மாணவர்கள் 63 நாயன்மார்களின் பல்லக்கை சுமந்து மாடவீதியில் வலம் வந்தனர்.

63 Nayanmars procession on sixth day of Annamalaiyar Temple Deepam festival
அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழாவில் ஆறாம் நாளில் 63 நாயன்மார்கள் ஊர்வலம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 6:21 PM IST

திருவண்ணாமலை தீபத்திருவிழா

திருவண்ணாமலை: பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை ஆகும். அந்த வகையில், இங்கு உள்ள புகழ் மிக்க அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோரும் திருக்காா்த்திகை தீப திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.

அதேப்போல், இந்த ஆண்டும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ஆம் தேதி அண்ணாமலையார் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொங்கியது. இந்த நிலையில், திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் 6ஆம் நாளான இன்று (நவ. 22) காலை, பள்ளி மாணவர்கள் 63 நாயன்மார்கள் பல்லக்கை சுமந்து மாடவீதியில் வலம் வந்தனர். முன்னதாக விநாயகர், சந்திரசேகர் மற்றும் அறுபத்து மூவர் நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதையும் படிங்க: நடிகை கெளதமியின் நில மோசடி புகார்.. தலைமறைவான அழகப்பன் குடும்பத்திற்கு லுக் அவுட் நோட்டீஸ்..!

மேலும், சிவபெருமானுக்கு தொண்டு செய்த அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், சம்பந்தர், கண்ணப்ப நாயனார், சிறுதொண்டு நாயனார் உள்ளிட்ட 63 நாயன்மார்களை சிறப்பிக்கும் வகையில், 60 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த விழாவில், ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், 63 நாயன்மார்களை சுமந்து கொண்டு மாடவீதியுலா வருவர்.

அந்த வகையில், இந்த ஆண்டும் மாணவர்கள் 63 நாயன்மார்கனை சுமந்து மாடவீதியுலா வந்தனர். இதனைத் தொடந்து, விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனத்திலும் மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேலும், இன்று(நவ. 22) இரவு பஞ்சமூர்த்திகளின் 114ஆம் ஆண்டு வெள்ளி ரத மாட வீதியுலா நடைபெறும்.

இதையும் படிங்க: தஞ்சாவூரில் தமிழக நடுகல் மரபுக் கண்காட்சி..! கல்லூரி மாணவர்கள் ஆர்வம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.