திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.பி. சக்ரவர்த்தி அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில், தானிப்பாடி அருகிலுள்ள சின்னையம்பேட்டை சோதனைச்சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்த முற்பட்டபோது கார் நிற்காமல் காவலர்கள் மீது மோத வருவதுபோல் வந்து திடீரென யூ டர்ன் செய்த போது எதிரில் வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தை ஏற்படுத்திய காரை சோதனை செய்தபோது அதில் 70 லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று லாரி டியூப், ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 தண்ணீர் பாட்டில்களில் 230 லிட்டர் கள்ளச்சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.
காரில் வந்த கோபிநாத், மாரிமுத்து ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்ற காவலில் உட்படுத்தி கள்ளச்சாராயம், காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: 'சாராயமா கடத்துறீங்க!' கண்காணிக்க கிளம்பியது ட்ரோன்