ETV Bharat / state

பெண்கள் மீதான வன்முறையை தடுக்கக்கோரி மாதர் சங்கத்தினர் நடைபயணம்! - அனைத்திந்திய ஜனநாயக மாதர்

திருவண்ணாமலை: பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் மற்றும் போதையால் ஏற்படும் தீமைகளை தடுக்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் திருவண்ணாமலையில் இருந்து சென்னை கோட்டை வரை நடைபயணம் மேற்கொண்டனர்.

thiruvannamalai
author img

By

Published : Nov 25, 2019, 8:22 PM IST

உலக வன்முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறை, போதையால் ஏற்படும் தீமைகள் உள்ளிட்டவைகளை தமிழ்நாடு அரசு தடுக்கக் கோரி தமிழ் மாநிலக்குழு சார்பில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் திருவண்ணாமலையில் இருந்து சென்னை கோட்டை வரை நடைபயணம் மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே தொடங்கிய நடைபயணத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, திரைப்பட இயக்குனர் லெனின் பாரதி உள்ளிடோருடன் நூற்றுக்கும் மேற்பட்ட மாதர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த பாலபாரதி, "படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைப்போம் என்று அரசாங்கம் கூறியது, ஆனால் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டுதான் வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கஞ்சா, குட்கா உள்ளிட்டப் போதைப் பொருட்கள் காவல்துறையினருக்கு தெரிந்தே விற்பனை செய்யப்படுகிறது.

நடைபயணத்தின் போது

இதுபோன்ற காரணங்களால், கோவை மாவட்டத்தில் மூன்று வயது சிறுமி பாலியல் வண்புணர்விற்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார், ஈரோடு அந்தியூரில் இரண்டு மாணவிகள் பாலியல் வண்புனர்வால் உயிரிழந்துள்ளனர். இவற்றைப் பட்டியல் போட்டால் எல்லா மாவட்டங்களிலும் நீண்டு கொண்டே செல்கிறது. தமிழ்நாடு அரசு பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அரசாக உள்ளது. இதனைக் கண்டிக்கும் விதமாக சென்னை கோட்டை வரை 200 கி.மீ நடைபயணம் மேற்கொள்கிறோம். என்றார்.

இதையும் படிங்க: ஒன்பது வயது சிறுமியை சீண்டியவர் போக்சோவில் கைது!

Intro:உலக வன்முறை எதிர்ப்பு தினமான இன்று, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை மற்றும் போதை ஆகியவற்றால் ஏற்படும் தீமைகளை தடுக்கக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ் மாநிலக்குழு சார்பில், திருவண்ணாமலையில் இருந்து துவங்கி சென்னை கோட்டை நோக்கி நடைபயணம் தற்போது திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே துவங்கியதுBody:உலக வன்முறை எதிர்ப்பு தினமான இன்று, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை மற்றும் போதை ஆகியவற்றால் ஏற்படும் தீமைகளை தடுக்கக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ் மாநிலக்குழு சார்பில், திருவண்ணாமலையில் இருந்து துவங்கி சென்னை கோட்டை நோக்கி நடைபயணம் தற்போது திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே துவங்கியது.

முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி , திரைப்பட இயக்குனர் லெனின் பாரதி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாதர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்டனர்.

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கூறியதாவது,

படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைப்போம் என்று அரசாங்கம் கூறியது ஆனால் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது

தமிழகத்தில் பல இடங்களில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் காவல்துறையினருக்கு தெரிந்தே விற்பனை செய்யப்படுவது தொடர்கிறது. இதுபோன்ற காரணங்களால் கோவை மாவட்டத்தில் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு மரணம், அந்தியூரில் 2 மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் இப்படி பட்டியல் போட்டால் நீண்டுகொண்டே எல்லாம் மாவட்டத்திலும் செல்கிறது தமிழகத்தில் உள்ள அரசு பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத அரசாக உள்ளது இதனை கண்டித்து 400 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொள்கிறோம் என்று தெரிவித்தார்Conclusion:உலக வன்முறை எதிர்ப்பு தினமான இன்று, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை மற்றும் போதை ஆகியவற்றால் ஏற்படும் தீமைகளை தடுக்கக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ் மாநிலக்குழு சார்பில், திருவண்ணாமலையில் இருந்து துவங்கி சென்னை கோட்டை நோக்கி நடைபயணம் தற்போது திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே துவங்கியது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.