ETV Bharat / state

ஊடரங்கு உத்தரவை மீறும் மக்கள் - கரோனா கம்மிங் ப்ரோ! - 144 people in Chengam area

திருவண்ணாமலை: கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால், ஊரடங்கு உத்தரவை மீறி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய செங்கம் பகுதி மக்களின் செயல் பல்வேறு தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

144 people in Chengam area
144 people in Chengam area
author img

By

Published : Apr 5, 2020, 5:30 PM IST

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவினை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு காலங்களில் பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் விதமாக காய்கறி, மளிகை, இறைச்சி உள்ளிட்ட சில கடைகள் செயல்படலாம் எனவும், தமிழ்நாடு அரசு விதித்தக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி மக்கள் மத்திய, மாநில அரசுகளின் உத்தரவை மதிக்காமல் வழக்கம் போல் இயங்கி வருகின்றனர். இதனைத்தடுக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் வீட்டை விட்டு வெளியேறுவோர் மீது வழக்குப்பதிவு செய்தும், கரோனா வைரஸ் பரவல் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகின்றனர்.

ஊடரங்கு உத்தரவை மீறும் மக்கள்

இருப்பினும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு காலங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்வகையில், பொதுமக்கள் சாலைகளில் சுற்றித் திரிந்துவருகின்றனர்.

அத்தியாவசியத் தேவைக்காக வீட்டைவிட்டு வெளியேறும் மக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அமைதி காத்த காவல்துறையினர் முன்பு வாகன ஓட்டிகள் சிலர் வீலிங் செய்து காட்டினர்.

144 people in Chengam area
ஊடரங்கு உத்தரவை மீறும் மக்கள்

பொது மக்களின் இந்தச் செயலுக்கு வேதனை தெரிவித்த காவல்துறையினர், ஊரடங்கு உத்தரவு மக்களைக் காக்க அமல்படுத்தப்பட்டது என்றும், இதனை மக்கள் அறியாமல் வெளியில் சுற்றுவதால் கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் அதிகளவு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:கரோனா எதிரொலி - தனிமைப்படுத்தப்பட்ட 1,800 வீடுகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.