ETV Bharat / state

உறவினர் பெண்ணால் இளைஞர் கொலை: காவல் துறை விசாரணை! - Youngster murder by relative girl news

திருவள்ளூர்: உறவினர் பெண்ணால் இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

திருவள்ளூர் அருகே உறவினர் பெண்ணால் இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை போலீசார் விசாரணை

author img

By

Published : Jan 3, 2021, 4:02 PM IST

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அல்லிமேடு பகுதியைச் சேர்ந்த அஜித் (25) என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய தனது உறவினர் பெண்ணை நேற்றிரவு (ஜன. 2) கத்தியை காட்டி தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.

அப்போது, அந்தப் பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். இரவு நேரம் என்பதால் உதவிக்கு யாரும் வராத சூழலில், அஜித்திடமிருந்த கத்தியை பிடுங்கி அவரை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே அஜித் உயிரிழந்துள்ளார். பின்னர் சோழவரம் காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி அந்த இளம்பெண் சரணடைந்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சோழவரம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூராவிற்காக அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், எதற்காக கொலை செய்யப்பட்டார், குடும்பப் பிரச்னையா? அல்லது முன்விரோதமா? என்ற பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க...கோவிட்-19 பரவலுக்குப் பின் பூரி ஜெகன்நாதர் ஆலயம் மீண்டும் திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.