சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் - லதா தம்பதியினருக்கு முரளி (22), பூவண்ணன் (18) என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் முரளி என்பவர் தனது குடும்பத்தாருடன் சண்டையிட்டு, ஜெ.ஜெ.நகரில் தனியாக வீடு எடுத்து தங்கியும், அதே பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாகவும் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முரளி தான் தற்கொலை செய்யப்போவதாக செல்போனில் வீடியோ ஒன்றைப் பதிவு செய்துவிட்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அப்பகுதியினர் ஜெ.ஜெ.நகர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், முரளியின் உடலைக் கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடியோ பதிவுசெய்துவிட்டு வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.