திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ள கருக்குழாய் தெருவில் ’மை ஹாட் கிச்சன்’ என்ற உணவகம் உள்ளது. அந்த உணவகத்தில் விருதுநகரைச் சேர்ந்த மோகன் ராஜ்(22) பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று கடையின் மாடியில் ஏறி அங்குள்ள நீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்றுள்ளார். அப்போது மாடியின் மீது தாழ்வாக சென்ற மின்சார கம்பி அவர் மீது பட்டதால் மின்சாரம் பாய்ந்தது. இதனால் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு கடந்த ஆண்டும் இதே போல் ஒரு சம்பவம் நடைபெற்றது. இது இரண்டாவது சம்பவமாகும். எனவே, மின்சார வாரிய அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின்சார வயரை மேலே உயர்த்தி அமைக்க வேண்டும்.”, எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து திருவள்ளூர் நகர போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து மோகன்ராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.