ETV Bharat / state

நிலுவைத் தொகையை வழங்கக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்! - Unitex Readymade Company

திருவள்ளூர்: தனியார் ஆயத்த ஆடை நிறுவனம் வழங்கவேண்டிய நிலுவைத் தொகையைப் பெற்றுத் தரக்கோரி 91 பெண் தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Workers protest
author img

By

Published : Nov 18, 2019, 8:42 PM IST

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாபேட்டையில் இயங்கி வந்த யூனிடெக்ஸ் என்ற தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் கடந்த 2016ஆம் ஆண்டு எந்தவித அறிவிப்புமின்றி மூடப்பட்டது.

இதையடுத்து இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த 91 பெண் தொழிலாளர்களுக்குச் சம்பளம் மற்றும் மூன்று மடங்கு அபராத தொகை என மொத்தம் ஒரு கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 24 ரூபாய் பணத்தை வழங்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியது. ஆனால் ஆறு மாதங்கள் ஆகியும் தற்போது வரை பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நிலுவைத் தொகையை வழங்கவில்லை.

நிலுவைத் தொகையை வழங்கக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், பாதிக்கப்பட்ட 91 பெண் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களுக்கு உரிய முறையில் நிலுவைத் தொகையைப் பெற்றுத் தரக் கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் மகேஸ்வரியைச் சந்தித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் 15 நாட்களில் உரியத் தீர்வு காணப்படும் என உறுதியளித்ததை அடுத்து பெண் ஊழியர்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: காலமதாமதமாக பணிக்கு வந்ததற்கு தடை - ஓட்டுநர் தீக்குளிக்க முயற்சி

Intro:

1 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 24 ரூபாய் நிலுவை தொகையை ஆயத்த ஆடை தனியார் நிறுவன 91 பெண் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் இணை ஆணையர் உத்தரவிட்டும் 6 மாதமாக வழங்காததால் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Body:18-11-2019
திருவள்ளூர் மாவட்டம்

1 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 24 ரூபாய் நிலுவை தொகையை ஆயத்த ஆடை தனியார் நிறுவன 91 பெண் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் இணை ஆணையர் உத்தரவிட்டும் 6 மாதமாக வழங்காததால் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டடம் செவ்வாபேட்டையில் இயங்கி வந்த யூனிடெக்ஸ் என்ற தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டு எவ்வித எவ்வித அறிவிப்பும் மூடப்பட்டது.
இதில் பணிபுரிந்து வந்த 91 தொழிலாளர்களுக்கு கூலி மற்றும் மூன்று மடங்கு அபராத தொகை ஒரு கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 24 ரூபாய் பணத்தை வழங்க கோரி நீதிமன்றம் வலியுறுத்தியும் கடந்த ஆறு மாதங்களாக
நிறுவனம் வழங்காததால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்தங்களுக்கு உரிய முறையில் பணத்தை பெற்று தர கோரி மனு அளித்து 91 பெண்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மகேஸ்வரியிடம் மனு அளித்தனர் அதனை அடுத்து
மனுவை பெற்றுக்கொண்ட அவர் 15 நாட்களில் உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பெண் ஊழியர்கள் கலைந்து சென்றனர்

பேட்டி

திருமதி. சுமதி.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.