திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த மோவூர் கண்டிகை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இறந்த உடலை விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லும் அவல நிலை நீடிக்கிறது.
இந்த கிராமத்தில் இறப்பு நேர்ந்தால் சடலத்தை 1 கிலோ மீட்டர் தூரம் சென்று சுடுகாட்டில் ஈமச் சடங்கு செய்வது வழக்கம். ஆனால், காலங்காலமாக சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் வயல்வெளியில் சுமந்து செல்வது வாடிக்கையாகி உள்ளது.
சுடுகாட்டு பாதை கேட்டு அரசு அலுவலர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை முறையிட்டும் இதுவரை யாரும் பாதை அமைத்து தராததால், இன்றும் அந்தக் கிராமத்தில் இறந்த நபரின் சடலத்தை வயல்வெளி வழியாக தூக்கிச் சென்றே அடக்கம் செய்கின்றனர்.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் ஆக்கிரமிப்பு செய்த சுடுகாட்டை மீட்டுத் தர கோரிக்கை!