ETV Bharat / state

‘100 நாள் வேலைத்திட்டம் 200 நாள்களாக மாற்றப்படும்’ - திமுக எம்எல்ஏ கிருஷ்ணசாமி - 100 நாள் வேலைத்திட்டம் குறித்து பேசிய திமுக எம்எல்ஏ கிருஷ்ணசாமி

திருவள்ளூர்: தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைத்திட்டம் 200 நாள்களாக மாற்றப்படும் என அதிமுகவை புறக்கணிப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற திமுகவின் மக்கள் கிராம சபை கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

திமுக எம்எல்ஏ கிருஷ்ணசாமி
திமுக எம்எல்ஏ கிருஷ்ணசாமி
author img

By

Published : Dec 28, 2020, 5:38 PM IST

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் செம்பேடு ஊராட்சியில் ‘அதிமுகவை புறக்கணிப்போம்’ என்ற தலைப்பில் திமுக மக்கள் கிராமசபை கூட்டம் எல்லாபுரம் மத்திய ஒன்றிய பொறுப்பாளர் கோடுவெளி தங்கம்முரளி தலைமையில் நடைபெற்றது.

பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணசாமி, திமுக தலைமை பேச்சாளர் சேலம் சுஜாதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். இந்த கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள், கிராம மக்கள், திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணசாமி, “தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தற்போது 100 நாள்கள் வேலை அளிக்கப்படாமல் இருப்பதையும், அதற்கான சம்பளம் சரிவர கொடுக்கப்படாததையும் அறிந்து பலமுறை அலுவலர்களிடம் முறையிட்டு உள்ளோம். அதற்கான தீர்வு திமுக ஆட்சி வந்தவுடன் கொடுக்கப்படும். மேலும், 100 நாள் வேலைத்திட்டம் 200 நாள்களாக உயர்த்தி வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு டோக்கன்: அதிமுகவினர் வழங்குவதை நிறுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.