திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற தலைப்பில் பொன்னேரி அடுத்த கொடூர் பஞ்சாயத்தில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் சி.ஹெ.ச். சேகர் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் மக்கள் சுரண்டப்பட்டுவருகின்றனர். இதற்குத் தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனக் கூறினார்
நிகழ்ச்சியின் முடிவில், 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மேலும், அதிமுக அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகை '2011 முதல் 2020 வரை' என்ற வாசகம் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.