திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் காசி நாதபுரம் பஞ்சாயத்தில் 60 நாட்களாக குடிநீர் சரிவர வழங்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, ஆழ்துளை கிணறுகள் அமைக்க ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஆவணம் செய்ய முன்வரவில்லை என்று குற்றஞ்சாட்டினர்.
அதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த மாதம் நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டோம். அப்போது குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதாக திருத்தணி வட்டார வளர்ச்சித் துறை அலுவலர் வாக்குறிதி அளித்தார். ஆனால், தற்போது வரை அதை நிறைவேற்றவில்லை. எங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்தால் மட்டுமே குடிதண்ணீர் வசதி இருக்கும், என்றனர்.
தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீசார், ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால், திருத்தணி நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை செய்தும் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு உறுதிமொழி கொடுங்கள் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் அந்த பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி வண்டிகள் பேருந்துகள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.