ETV Bharat / state

சாரம் சரிந்து கூலி தொழிலாளி பலி! - திருவள்ளூர்

திருவள்ளூர்: புழல் அருகே கட்டட வேலை செய்யும் போது சாரம் சரிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாரம் சரிந்து கூலி தொழிலாளி பலி!
author img

By

Published : Apr 2, 2019, 1:51 PM IST

புழல் அடுத்த கதிர்வேடு பிர்லா அவென்யூ இரண்டாவது தெருவில் பாலாஜி என்பவருடைய இடத்தில் புதியதாக வீடு கட்டும் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த கட்டுமான பணிகளுக்கு திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த கட்டட மேஸ்திரிகளான ராமு, ராஜா ஆகிய இருவர் வேலைக்கு கூலி ஆட்களை பணியில் அமர்த்தி கட்டுமான பணிகள் செய்து வருகின்றனர்.

அவரிகளிடம் திருமுல்லைவாயல் கலைஞர் கருணாநிதி தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி குமாரவேல் பணியாற்றி வருகிறார். இவருக்கு சுபாஷினி(32) என்ற மனைவியும், கௌசிகா, சுருதி என்கிற இரு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் அவர் வழக்கம் போல் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, கட்டடத்தின் முதல் மாடியில் இருந்து 45 அடி உயரத்தில் உள்ள சாரம் சரிந்து கீழே விழுந்தது.

இதில் பாபுவுக்கு நெஞ்சில் பலத்த காயம் ஏற்பட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதையடுத்து பாபுவின் உறவினர்கள் கட்டட உரிமையாளர் பாலாஜி, மேஸ்திரி ராமு, ராஜா மீது புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மூவரையும் கைது செய்த புழல் போலீஸார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:புழல் அருகே கட்டிட வேலை செய்யும் போது சாரம் சரிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி பலி. மூவர் கைது.

Body:புழல் அடுத்த கதிர்வேடு பிர்லா அவென்யூ 2வது தெருவில் பாலாஜி என்பவருடைய இடத்தில் புதியதாக வீடு கட்டும் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த கட்டுமான பணிகளுக்கு திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த பில்டிங் காண்ட்ராக்ட்டர் மேஸ்திரி ராமு, ராஜா ஆகிய இருவர் வேலைக்கு கூலி ஆட்களை பணியில் அமர்த்தி கட்டுமான பணிகள் செய்து வருகின்றனர். இதில் திருமுல்லைவாயல் கலைஞர் கருணாநிதி தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி குமாரவேல் என்கின்ற பாபு பணியில் ஈடுபட்டிருந்தபோது கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து 45 அடி உயரத்தில் உள்ள சாரம் சரிந்து கீழே விழுந்தது அவர் நெஞ்சில் பலத்த காயம் ஏற்பட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மேலும் அவர் இந்த விபத்து குறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், கட்டிட தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுவது இல்லை எனவும் உரிய ஆயுள் காப்பீட்டு பதிவு செய்யப்படவில்லை எனவும் மற்றும் கட்டுமான பணிக்கான பதிவு ஆவணங்கள் முறைப்படி பதிவு செய்யவும் இதுபோன்ற உயிரிழப்புகள் அடிக்கடி கட்டிட தொழிலாளி ஏற்படுவதாக குற்றம் சாட்டினர் .இறந்த குமாரவேலுக்கு சுபாஷினி வயது 32 என்ற மனைவியும், கௌசிகா, சுருதி என்கிற இரு மகள்களும் உள்ளனர். இதுபற்றி புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் இடத்தின் உரிமையாளர் பாலாஜி மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர்கள் திருமுல்லைவாயலை சேர்ந்த ராமு ,ராஜா ஆகிய மூவரையும் கைது செய்து புழல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Conclusion:இதுபற்றி புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் இடத்தின் உரிமையாளர் பாலாஜி மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர்கள் திருமுல்லைவாயலை சேர்ந்த ராமு ,ராஜா ஆகிய மூவரையும் கைது செய்து புழல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.