திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று அலகுகளில் தலா 500 வீதம், நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு ஒப்பந்த அடிப்படையிலான ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுழற்சி முறையில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதற்காக தொழிற்சாலை ஆணையரிடம் முறையான அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்று தொழிலாளர்களை பணி அமர்த்தி உள்ளது.
இதனால் தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய பணி அடையாள அட்டை, பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பு, ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், என்டிசிஎல் நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில், மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
68 மில்லியன் டன் உணவுப் பொருள்கள் வீண் - ஐநா அதிர்ச்சி ரிப்போர்ட்