ETV Bharat / state

கொலையா, தற்கொலையா..? - மரத்தில் தொங்கிய இளைஞர் சடலம்! - கொலையா

திருவள்ளூர்: கூவம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள வேப்பமரத்தில், தூக்கிட்ட நிலையில் சடலமாக இளைஞர் மீட்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மரத்தில் தொங்கிய ஆண் சடலம்! கொலையா, தற்கொலையா...?
author img

By

Published : May 4, 2019, 3:49 AM IST

புட்லூர் கூவம் ஆற்றின் கரையோரத்தில் வேப்பமரத்தில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவளித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செவ்வாப்பேட்டை காவல்துறையினர், வேப்பமரத்தில் சடலமாகத் தூக்கில் தொங்கிய இருந்த இளைஞரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், அந்த இளைஞர், திருவலங்காடு அருகே உள்ள பழையனூர் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்பது தெரியவந்தது. இவர் சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொழில்நுட்ப பிரிவில் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த இளைஞரின் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் கைப்பற்றினர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் பணிச்சுமை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டாரா? குடும்ப தகராறில் யாரேனும் அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? எனும் பல்வேறு கோணங்களில் செவ்வாப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:கூவம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள வேப்பமரத்தில் இளைஞர் தூக்கிட்ட நிலையில் சடலம மீட்பு இச்சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என போலீசார் விசாரணை.

Body:திருவள்ளூர் அருகே உள்ள புட்லூர் கூவம் ஆற்றின் கரையோரத்தில் வேப்பமரத்தில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் சடலமாக தூக்கிட்ட நிலையில் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செவ்வாப்பேட்டை காவல்துறையினர் வேப்பமரத்தில் சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த இளைஞரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் இந்த இளைஞர் திருவலங்காடு அருகே உள்ள பழையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் இவர் பெயர் அமுல் என்கின்ற அந்தோணிராஜ் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர் சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டெக்னீசியனாக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் இளைஞர் பயன்படுத்தும் இருசக்கர வாகனம் இருந்ததை போலீசார் கைப்பற்றினர் மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடும்ப தகராறில் யாரேனும் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டார் என்ற கோணத்தில் செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.