திருவள்ளூர் தாலுகா காவல்நிலைய எல்லைக்குள்பட்ட ஏரிக்கரைப் பகுதி, பாண்டூர் தனியார் கல்லூரி அருகே தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்கள் கஞ்சா விற்கப்படுவதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இது குறித்த தகவலின்பேரில் தாலுகா உதவி ஆய்வாளர் கணேஷ் தலைமையிலான காவலர்கள் போரூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த இருவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது இருவரும் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தனர். இதையடுத்து அவர்கள் மீது சந்தேகம் கொண்டு காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தபோது அவர்கள் அங்கிருந்து கஞ்சா விற்பனைசெய்வது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடமிருந்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களைக் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். பின்னர் இருவரையும் திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பனைத்தொழிலின் மகத்துவத்தை அடுத்த தலைமுறை அறியுமா?