திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் எண்ணூரில் இருந்து சிப்காட் தனியார் தொழிற்சாலைக்கு நிலக்கரி ஏற்றிக் கொண்டு இரண்டு லாரிகள் சென்றன.
அப்போது முன்னே சென்ற லாரியின் பின்புற டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த லாரியின் மீது பின்புறம் வந்த லாரி மோதி விபத்தானது.
இதில் விழுப்புரத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் அருணாச்சலம் (42) ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த கவரப்பேட்டை காவல் துறையினர் ஓட்டுநரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு!