திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட செஞ்சி கிராமத்தில் சுமார் 60 ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதில் 13 குடும்பங்களுக்கு மட்டும் தொகுப்பு வீடு வழங்கப்பட்டன. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.
அந்த வீடுகள் பழுதடைந்துள்ளன. தற்பொழுது தினம் தினம் குழந்தைகளை வைத்துக்கொண்டு பழங்குடியின மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகள் இல்லை.
அந்தப் பகுதியில் கழிவறைகள் கட்டுவதற்கு கூட போதிய இட வசதி இல்லை. பழுது இல்லாத வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக ஆய்வு செய்து அந்த இடத்திற்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் பின்னணி என்ன?