ETV Bharat / state

‘என்னை புகழ்ந்து பேசியது மிகவும் பயமாக உள்ளது!’ - டி.ஆர்.பாலு - கெருகம்பாக்கத்தில் பிரச்சாரம்

திருவள்ளூர்: ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் பூந்தமல்லியை அடுத்துள்ள கெருகம்பாக்கத்தில் நடைபெற்றது.

டி.ஆர்.பாலு
author img

By

Published : Mar 25, 2019, 7:43 AM IST

பூந்தமல்லி அடுத்த கெருகம்பாக்கத்தில் திமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலுவை அறிமுகம் செய்து தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பேசிய திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கத்திப்பாரா மேம்பாலம், நந்தம்பாக்கம் வர்த்தக மையம் ஆகியவற்றை கொண்டு வந்தது டி.ஆர்.பாலுதான் என ஏகத்துக்கும் புகழ்ந்தனர்.

பின்னர் பேசிய டி.ஆர்.பாலு, "தனக்கு முன் பேசியவர்கள் என்னைப் பற்றி புகழ்ந்து பேசினார்கள். அவர்கள் இவ்வாறு என்னை புகழ்ந்து பேசியதுதான் எனக்கு மிகவும் பயமாக உள்ளது. என்னை புகழ்வதை விட்டு களப்பணி செய்து மதச்சார்பற்ற முற்போக்குகூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய பாடுபட வேண்டும்"எனத்தெரிவித்தார்.

டி.ஆர்.பாலுவின் இந்த நகைச்சுவை பேச்சால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. இந்நிகழ்வில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பூந்தமல்லி அடுத்த கெருகம்பாக்கத்தில் திமுக சார்பில் திருபெரும்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டி ஆர் பாலுவை அறிமுகம் செய்து வைத்து செயல்வீரர்களுக்கு தேர்தல் பணிக்குறித்த ஆலோசனைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இதற்கு முன்னாள் அமைச்சர் தமோ அன்பரசன் தலைமை தாங்கினார்.முன்னதாக பேசிய கூட்டணி கட்சி மற்றும் திமுக  தலைவர்கள் கதிபார மேம்பாலம் நந்தபாக்கம் trade சென்டர் ஆகியவற்றை கொண்டுவந்தது டிஆர் பாலூதான் என ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினர்.பின்னர் பேசிய டிஆர் பாலு  தனக்கு முன் பேசிய கூட்டணி கட்சியினர் மற்றும் திமுக தலைவர்கள் என்னைப்பற்றி புகழ்ந்து பேசினார்கள் அவ்வாறு அவர்கள் என்னை புகழ்ந்து பேசியதுதான் எனக்கு மிகவும் பயமாக உள்ளது என நகைசுவையாக கூறினார்.இதனால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.தொடர்ந்து பேசியவர் என்னை புகழ்வதை விட்டு களப்பணி செய்து மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய பாடுபடவேண்டுமென கோரிக்கை வைத்தனர்.இந்நிகழ்வில் திமுகவின் ஆர் எஸ் பாரதி கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆண்கள் பெண்களென 1000கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.