ETV Bharat / state

டன் கணக்கில் நெகிழி கழிவு; ஏரி சீரமைப்பதில் தொய்வு!

திருவள்ளூர்: அயப்பாக்கத்தில் ஏரியை சீரமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அள்ள அள்ள குறையாமல் டன் கணக்கில் வரும் நெகிழி கழிவுகளை அகற்ற முடியாததால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

tons-of-plastic-waste-lag-in-lake-alignment

author img

By

Published : Nov 24, 2020, 8:18 PM IST

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயப்பாக்கம் ஊராட்சியில் ஏரி ஒன்று உள்ளது, சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் புனரமைக்கப்பட்டு சுமார் 6,500 மரக்கன்றுகள் நட திட்டமிட்டு, ஏரிக்கு நடுவே தீவு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஏரியை சுற்றி கரைகளை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. அயப்பாக்கம் முதல் அம்பத்தூர் சாலை வழியே இருக்கும் ஏரிக்கரையோரம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் சமூக விரோதிகளால் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

தோண்ட தோண்ட வரும் நெகிழி கழிவுகளால் பணிகள் முடங்கிப் போவதோடு, சுமார் ஆயிரம் டன் கணக்கில் நெகிழி கழிவுகள் தோண்டி எடுக்கப்பட்டு ஏரியின் வெளியே கொட்டப்பட்டு வருகின்றன. அரசுக்கு சொந்தமான ஏரியை தனியார் அமைப்பினர், சொந்த செலவில் புனரமைக்கும் பணியின்போது, இது மாதிரியான சம்பவத்தால் ஏரியை சீரமைக்கு பணி தொய்வடைவது வேதனை அளிப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க:குளத்திலிருந்து பெண் சடலம் மீட்பு : போலீசார் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.