ETV Bharat / state

ஆணவப் பேச்சு பேசிவரும் திமுக தலைவருக்கு சம்மட்டியடி கொடுப்போம் -முதல்வர்

திருவள்ளூர் : இந்த தேர்தலோடு ஸ்டாலின் ஆணவப் பேச்சுக்கு   முற்றுப்புள்ளி வைக்க கூடிய தேர்தலாக  அமைய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

author img

By

Published : Mar 24, 2019, 11:58 PM IST

எடப்பாடி பழனிசாமி

திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர்.வேணுகோபால் மற்றும் பூந்தமல்லி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்தியநாதன் ஆகியோரை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 40 மக்களவை தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி கட்டாயம் வெற்றி பெறும். 18 தொகுதி இடைத் தேர்தலிலும் அதிமுக வெற்றிவாகை சூடுவது உறுதியாகி விட்டது என்று தெரிவித்தார்.

மேலும், அதிமுக அரசால் மக்களுக்கு செய்யும் திட்டங்களை எல்லாம் திமுக அரசு ஏதாவது ஒரு வகையில் மக்களுக்குபோய் சேரவிடாமல் தடுக்க முயன்று வருவதாக குற்றம் சாட்டினார். அதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர். இந்த தேர்தலில் தர்மம் வெல்ல வேண்டும். வேண்டுமென்றே நமது கூட்டணிகளை திட்டமிட்டு விமர்சனம் செய்து வருகிறார் ஸ்டாலின்.

இந்தத் தேர்தல் மூலமாக இப்படிப்பட்ட ஆணவப் பேச்சு பேசி வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருக்கு சமிட்டியடி கொடுக்கக்கூடிய தேர்தலாக இருக்க வேண்டும் என சூளுரைத்தார். இதனிடையே, நன்றாக உங்களுக்கு தெரியும் அதிமுக ஆட்சியை கலைக்கவேண்டும் என்பதற்காகவும் அண்ணா திமுகவை உடைப்பதற்காகவே சதி திட்டம் தீட்டி சில துரோகிகள் துரோகம் விளைவித்தனர் அந்த துரோகத்தின் விளைவாக இந்த சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

24-03-2019

திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்பாபு

ஆணவப் பேச்சு பேசிவரும் திமுக தலைவருக்கு சமிட்டியடி கொடுக்கக்கூடிய தேர்தலாகவும்,  இந்த தேர்தலோடு அவருடைய ஆணவப் பேச்சுக்கு   முற்றுப்புள்ளி வைக்க கூடிய தேர்தலாக  அமைய வேண்டும் என திருவள்ளூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்.
 
திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர்.வேணுகோபால் மற்றும் பூந்தமல்லி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்தியநாதன் ஆகியோரை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 40 மக்களவை தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி கட்டாயம் வெற்றி பெறும். 18 தொகுதி இடைத் தேர்தலிலும் அதிமுக வெற்றிவாகை சூடுவது உறுதியாகி விட்டது. மத்தியில் நிலையான ஆட்சி, உறுதியான ஆட்சி அமைய மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் நாட்டின் பாதுகாப்பை மோடியால்தான் உறுதிப்படுத்த முடியும் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் எண்ணற்ற திட்டங்களை வழங்கினார். அதிமுக ஆட்சியின் திட்டங்களால் எல்லாத் தரப்பு மக்களும் ஏதோ ஒரு வகையில் பயன்பெற்றுள்ளனர்.  ஆனால் அதிமுக அரசால் மக்களுக்கு செய்யும் திட்டங்களை எல்லாம் திமுக அரசு எதவது ஒரு வகையில் மக்களுக்குபோய் சேரவிடாமல் தடுக்க முயன்று வருவதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய முதல்வர். இந்த தேர்தலில் தர்மம்வெல்ல வேண்டும்.   வேண்டுமென்றே நமது கூட்டணிகளை திட்டமிட்டு விமர்சனம் செய்து வருகிறார் ஸ்டாலின். இந்தத் தேர்தல் மூலமாக இப்படிப்பட்ட ஆணவப் பேச்சு பேசி வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருக்கு சமிட்டியடி கொடுக்கக்கூடிய தேர்தலாக இருக்க வேண்டும். இந்த தேர்தலோடு அவருடைய ஆணவப் பேச்சுக்கு   முற்றுப்புள்ளி வைக்க கூடிய தேர்தலாக அமைய வேண்டும்  அதேபோல் இடைத் தேர்தல் யாரால் வந்தது  என்று நன்றாக உங்களுக்கு தெரியும் அதிமுக  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியை கலைக்க  வேண்டும் என்பதற்காகவும் அண்ணா திமுகவை  உடைப்பதற்காகவே சதி திட்டம் தீட்டி சில துரோகிகள்  துரோகம் விளைவித்தனர் அந்த துரோகத்தின் விளைவாக இந்த சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக தெரிவித்தார் அந்த துரோகிகளுக்கு தகுந்த பாடம் இந்த தேர்தல் மூலமாக புகட்டப்பட வேண்டும் இந்த வெற்றி மூலமாக அந்த துரோகிகள் இனி  தேர்தலையே நினைக்கக் கூடாது.  புரட்சித்தலைவி அம்மாவின் வழியிலே நடைபெறுகின்ற இந்த ஆட்சியிலே எவ்வளவு போராட்டங்கள்  சந்தித்திருக்கின்றோம்.  இந்த இரண்டாண்டு ஆட்சி காலத்தில் போராட்டங்கள் இல்லாத நாட்களே கிடையாது. ஸ்டாலின் தூண்டுதலால் பல போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்களை அழைத்து பேசி பிரச்சனைகளை தீர்த்து  இன்றைக்கு தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக விளங்குகின்றது. இந்தியாவிலேயே  சட்டம் ஒழுங்கு பேணிக்காக்கபடுகின்ற மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.  தமிழ்நாடு  எல்லாம் துறைகளிலும் முதலிடம் வகிப்பதாகவும், துறைவாரியாக திறமைகளை வெளிபடுத்தி இந்தியளவில் விருதுகளை குவிக்கின்ற அரசு தமிழக அரசு என தெரிவித்தார்.

Send in mojo app
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.