ETV Bharat / state

சிலைகளை உடைத்த வடமாநில இளைஞர் கைது

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த பழஞ்சூர் பகுதியில்  உள்ள பழமையான அகத்தீஸ்வரர் கோவிலின் சிலைகளை சேதப்படுத்திய வடமாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேதப்படுத்தியுள்ள சிலைகள்
author img

By

Published : Jun 8, 2019, 12:03 AM IST

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த பழஞ்சூர் பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோயிலை மறுசீரமைப்பதற்காக கோயில் நிர்வாகிகள் கதவை திறந்து வைத்து விட்டு வெளியில் சென்றுள்ளனர். பின்னர் திரும்பவும் மாலை வந்த போது வடமாநில இளைஞர் ஒருவர் அரை நிர்வாணமாக கோயிலில் இருந்த பீரோவை ஆராய்ந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் கோயில் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கோயிலில் ஆய்வு செய்தபோது அந்த வாலிபர் இரண்டு பழமை வாய்ந்த சிலைகளை சேதப்படுத்தியிருப்பது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்த காவல்துறையினர் இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயிலில் பதிவான சிசிடிவி காட்சி

விசாரணையின் போது பிடிபட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்துக் கொள்வதால், உண்மையாகவே மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடிக்கிறாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி அடுத்த பழஞ்சூர் பகுதியில்  பழமை வாய்ந்த ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு அகத்தீஸ்வரர் கோவில் உள்ள சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்

பூந்தமல்லி அடுத்த பழஞ்சூர் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இன்று மாலை இந்த கோவிலை சுற்றிலும் சீரமைப்பதற்காக கதவுகளை திறந்து வைத்திருந்தனர்.  மாலையில் கோயில் நிர்வாகிகள் வந்து பார்த்த போது கோயில் வளாகத்தில் உள்ள ஒரு அறையின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் உள்ளே பார்த்தபோது ஒரு வட மாநில வாலிபர் ஒருவர் சட்டை ஏதும் அனியாமல் டவல் கட்டியபடி பீரோவை ஆராய்ந்து கொண்டிருந்தார் 

இதனை கண்டதும் அந்த கதவை வெளிப்புறமாக பூட்டிய கோயில் நிர்வாகிகள் சத்தம் போட்டனர். இதனை கண்டதும் அந்த வாலிபர் வெளியே வர முயற்சி செய்தார் கதவு வெளிப்புறமாக பூட்டப் பட்டிருந்ததால் அந்த நபரால் வரமுடியவில்லை இதுகுறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

 இதன் பிறகு கோயிலுக்குள் சென்று நிர்வாகிகள் பார்த்தபோது அங்கு சிலைகள் உடைந்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வட மாநில வாலிபர் அந்த இரண்டு சிலைகளையும் அடித்து உடைத்து இருப்பது தெரிய வந்தது 

மேலும் கோயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது டவல் கட்டியபடி கையில் ஒரு கல்லுடன் கோயிலுக்குள் வரும் அந்த வடமாநில வாலிபர் முதலில் கோயில் வளாகத்தில் உள்ள அறையின் பூட்டை உடைத்து உள்ளே செல்கிறார் அங்கு பொருட்கள் ஏதும் இல்லாததால் கோயிலுக்குள் வரும் அந்த வாலிபர் சத்தம் கேட்காமல் இருக்க கோயிலுக்குள் இருக்கும் ரேடியோவில் பாட்டு போட்டு விட்டு  அங்கு இருந்த ராகு மற்றும் நந்தி சிலையை கடப்பாறையால் உடைத்துள்ளார். அதில் ராகு சிலை இரண்டு துண்டாக உடைந்து விட்டது. முன் பகுதியில் இருந்த நந்தி சிலையை கடப்பாரையால் குத்தி சேதப்படுத்தியும் இருப்பது தெரியவந்தது மேலும் இந்த காட்சிகள் அனைத்தும் கோயிலுக்குள் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருப்பது தெரியவந்தது. 

இந்த நபர் கோயிலுக்குள் கொள்ளையடிக்கும் நோக்கில் வந்தாரா? அல்லது சிலைகளை சேதப்படுத்தும் நோக்கில் வந்தாரா? என்ற கோணத்தில் நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் பிடிபட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடிப்பதால் உண்மையாகவே மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடிக்கின்றாரா? என்ற கோணத்திலும் நசரத்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வடமாநில வாலிபர் கோயிலுக்குள் புகுந்து சிலைகளை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.