ETV Bharat / state

கிணற்றில் மூழ்கி 12ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு - திருவள்ளளூர் கிணற்றில் உயிரிழந்த பிளஸ்டூ மாணவன்

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே 12ஆம் வகுப்பு மாணவன் கிணற்றில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிளஸ்டூ மாணவன் கிணற்றில் மூழ்கி பலி
பிளஸ்டூ மாணவன் கிணற்றில் மூழ்கி பலி
author img

By

Published : May 28, 2020, 11:26 PM IST

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் லஷ்மிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன். இவர், 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

விடுமுறை நாட்கள் என்பதால் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது முரளிதரன் கிணற்று நீரில் மூழ்கியதால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், மீட்க முயன்றனர். ஆனால், அவர்களால் மீட்க முடியாததால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றிலிருந்த முரளிதரனை சடலமாக மீட்டனர்.

இது குறித்து செங்குன்றம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் முரளிதரன் உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முரளிதரன் உயிரிழப்பு குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனா: 7 நாட்களான பெண் குழந்தை உயிரிழப்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.